பெரிய வெங்காய இறக்குமதி தொடர்பில் எகிப்துடன் விசேட பேச்சுவார்த்தை
எகிப்தில் (Egypt) இருந்து பெரிய வெங்காய இறக்குமதியை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் எகிப்திய தூதுவர் மகேட் மொஸ்லேவுடன் நேற்று (26.04.2024) இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, எகிப்தில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை பற்றி இரு தரப்பினராலும் ஆராயப்பட்டுள்ளது.
எகிப்தின் ஆதரவு
இந்நிலையில், பெரிய வெங்காய இறக்குமதி தொடர்பில் தூதுவர் ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான இலங்கை - எகிப்து ஒத்துழைப்பு மாநாடு (JCTEC), இரு நாடுகளுக்குமிடையில் தற்போதுள்ள முதலீடு, வர்த்தக உறவுகள் மற்றும் எடுக்கப்படவிருக்கும் நிலையான நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 10 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

ராஜியை சிக்கலில் மாட்டிவிடும் சக்திவேல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
