இலங்கையிலுள்ள பழைய கட்டடங்களில் ஏற்படவுள்ள மாற்றங்கள்
நாட்டின் பண்டைய கட்டடங்களை நவீனமயப்படுத்தி முதலீட்டாளர்களுக்கு வழங்குவது குறித்து நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
பண்டைய மரபுகளை பாதுகாக்கும் வகையில் அவை திருத்தியமைக்கப்படும். இந்த விடயம் குறித்து ஏற்கனவே முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடப்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு கபுர் கட்டடம், எயிட் கிளப் கட்டடம் போன்ற சில இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களின் வரலாற்று மரபுகளுக்கு பாதிப்பில்லாத வகையில் அவை புதுப்பிக்கப்படும்.
நகர அபிவிருத்தி அதிகார சபை
நாட்டில் பெரும்பாலான பழைய கட்டடங்கள் சரியான வழிநடத்தல் இல்லாதததால் சேதமடைந்து வருகின்றன.
அவற்றை புதுப்பித்து பொருத்தமான வகையில் முதலீடுகளுக்காக பயன்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த வேலைத்திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கினார்.
இந்த வேலைத்திட்டத்திற்காக பயன்படுத்தக் கூடிய வேறு இடங்கள் குறித்தும் கண்டறியுமாறு அவர் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |