இலங்கையின் அணுசக்தி உற்பத்தி திட்டம் குறித்து வழங்கப்பட்டுள்ள அறிவுரை
அணுசக்தி உற்பத்தி திட்டத்தை இலங்கை ஏற்க வேண்டுமானால், முதலில் அந்த நாடு உறுதியான சட்டக் கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆலோசகர் மற்றும் அணுசக்தி நிபுணர் ஹலீல் அவ்சி தெரிவித்துள்ளார்.
உள்ளூர் சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் அணுசக்தி அதிகாரிகளின் சிறப்பு நிகழ்வில் உரையாற்றும் போது இதனை கூறியுள்ளார்.
அணுசக்தி உற்பத்தி திட்டங்களை ஏற்கும் முன் சுற்றுச்சூழல் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளும்போது கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பல காரணிகள்
இதன்போது ஒரு நாட்டில் அணுசக்தி திட்டத்தை மேற்கொள்ளும் போது கருத்தில் கொள்ள வேண்டிய பல காரணிகள் உள்ளன என்றும், அதில் முதலாவது உறுதியான சட்டப் பின்னணியை ஏற்படுத்துவது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ஒரு நாடு அணுசக்தி உற்பத்தி திட்டங்களை ஏற்க வேண்டுமா? அல்லது பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் பிற காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டுமா என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக அணுசக்தி உற்பத்தி தொடர்பில் இலங்கை,ரஷ்யாவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தமையின் மத்தியிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam