ரஸ்யாவிற்கு ஆதரவாக செயற்படும் இலங்கை!
ரஸ்யாவிற்கு எதிராக வாக்களிப்பதனை இலங்கை தவிர்த்துக் கொண்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிராக ரஸ்யா நடாத்தி வரும் தாக்குதல்களை கண்டித்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆதரவு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்களிப்பில் பங்கேற்கவில்லை
உக்ரைன் மீது ரஸ்யா அத்து மீறி பிரவேசித்து சர்வதேச சட்டங்களை மீறி தாக்குதல் நடத்தி வருவதாக உலக நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ரஸ்யாவை எதிர்த்து 143 நாடுகள் வாக்களித்திருந்தன.
இலங்கை உள்ளிட்ட 35 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவைத் தவிர, பெலாரஸ், வடகொரியா, சிரியா மற்றும் நிகரகுவா ஆகிய நான்கு நாடுகள் வாக்கெடுப்பை நிராகரித்தன.
குறியீடாக இருந்தாலும்,உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவிற்கு எதிராக செலுத்தப்பட்ட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் இதுவாகும்.
ஆதரவளித்த நாடுகளுக்கு நன்றி
கடந்த வாரம், கிரெம்ளினில் நடந்த ஒரு நிகழ்வில் , ஜனாதிபதி விளாடிமிர் புடின் கிழக்கு உக்ரேனிய பகுதிகளான லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகியவற்றை ரஷ்யாவின் பகுதிகளாக மாற்றுவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டார்.
ரஷ்யாவின் எந்தவொரு இணைப்புக் கோரிக்கையையும் அங்கீகரிக்க வேண்டாம் என்று, ஐக்கிய நாடுகளின் தீர்மானம் சர்வதேச சமூகத்தை அழைக்கிறது மற்றும் அதன் உடனடியான மாற்றத்தை கோருகிறது.
பேச்சுவார்த்தை மூலம் மோதலை குறைக்கும் முயற்சிகளை அது வரவேற்கிறது.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி, தீர்மானத்துக்கு ஆதரவளித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின்,இணைப்பிற்கான முயற்சிகள் பயனற்றது மற்றும் சுதந்திர நாடுகளால் ஒருபோதும் அங்கீகரிக்கப்படாது என்று அவர் ட்வீட் செய்தார், உக்ரைன் அதன் அனைத்து நிலங்களையும் திருப்பப் பெறும் என்று கூறியுள்ளார்.
மேலதிக செய்தி-சிவா மயூரி