ஜனநாயக மாநாட்டிற்கான அழைப்பில் இலங்கை புறக்கணிப்பு
அமெரிக்காவினால் உலக நாடுகளுக்கான ஜனநாயக மாநாட்டில் இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்படாததன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) இலங்கையை புறக்கணித்துள்ளார்.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
தெற்காசிய நாடுகளான இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், நிகழ்நிலை தொழிநுட்பத்தின் ஊடாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 9, 10ம் திகதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்குபற்றுமாறு இலங்கைக்கு பைடன் அழைப்பு விடுக்கவில்லை.
சீனா, ரஸ்யா மற்றும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே இவ்வாறு ஜனநாயக மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்வான், பிலிப்பைன்ஸ், மெக்ஸிக்கோ உள்ளிட்ட 110 நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளன.
அரசாங்கத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், தனியார்துறையினர் உள்ளிட்ட பலரும் இந்த மாநாட்டில் பங்குபற்ற உள்ளனர்.
ஜனநாயகங்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் சந்தர்ப்பங்கள் பற்றி இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
மேலும், ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாப்பதற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநாட்டில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரியவருகிறது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
