அதிக நிதி ஒதுக்கீடுகளுடனான வெளிநாடு கடன் திட்டங்களை முன்னெடுக்காது - பிபி ஜெயசுந்தர
இலங்கை இனி அதிக நிதி ஒதுக்கீடுகளுடனான வெளிநாடுகள் கடன் திட்டங்களை முன்னெடுக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதிகளுக்குப் பதிலாக உள்ளூர் நிதிகளைத் திரட்டுவது என்ற அடிப்படையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பிபி ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
புதிய மாதிரி மற்றும் மெதுவாகச் செல்வது என்ற அடிப்படையில் இந்த திட்டம் நகர்த்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2020 ஆகஸ்ட் இறுதிக்குள், இலங்கை அரசாங்கத்தினால் திருப்பிச்செலுத்த வேண்டிய கடன் நிலுவைத் தொகை 35.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இதில் 47வீதமானவை சந்தைக் கடன்களாகவும், 13 சதவீதம் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் செலுத்தவேண்டியுள்ளன. ஜப்பான் மற்றும் சீனாவுக்கு தலா 10 சதவீதம் கடன் செலுத்தவேண்டியுள்ளது. ஒன்பது சதவீதம் இந்தியாவுக்குச் செலுத்தவேண்டியுள்ளது. இரண்டு சதவீதம்; மீதமுள்ளவை கடன் கொடுத்தோருக்குச் செலுத்தவேண்டியுள்ளதாக ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெளிநாட்டு நேரடி முதலீட்டை மிக விரைவாக ஈர்க்க நாட்டை தயார்படுத்தல் அவசியம். இதன் காரணமாகவே துறைமுக நகர ஆணைக்குழு சட்டம் நிறைவேற்றப்பட்டதாக ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் துறைமுக நகரம் சீனாவுக்கு மாறுமா அல்லது இது இந்தியாவுக்கு
மாறுமா என்று ஊகிப்பதற்குப் பதிலாக முதலீடுகளை அங்கு மேற்கொள்ளுமாறு
அமெரிக்காவுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் பிபி ஜெயசுந்தர
தெரிவித்துள்ளார்.

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
