தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணிலின் அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாகவே இருக்கும் என நான் நினைக்கின்றேன். இப்போது எம்மை விமர்சித்து வீரவசனம் பேசுவோர் தேர்தல் காலங்களில் தோல்வியடைந்தே போவார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தேர்தலை நடத்த அரசு அஞ்சவில்லை. நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்து இருக்கும்போது தேர்தலை எப்படி நடத்துவது? நாடு இப்போதுதான் மெல்ல மெல்ல மீண்டெழுந்து வருகின்றது. இந்த உண்மை நிலை எதிர்க்கட்சிகளுக்கு விளங்கும்.
பெரும்பாலும் அடுத்த வருடம் தேர்தல் வருடமாகவே இருக்கும் என நான் நினைக்கின்றேன். எந்தத் தேர்தல் முதலில் நடைபெறும் என்று இப்போது கூற முடியாது. ஆனால், அடுத்த வருடம் தேர்தல் ஆண்டு என்பது நிச்சயம்.
இப்போது எம்மைக் கண்டபடி விமர்சித்து அரசியல் மேடைகளிலும், ஊடகங்கள் முன்னிலையிலும் வீரவசனம் பேசுவோர் தேர்தல் காலங்களில் தோல்வியடைந்தே போவார்கள். மக்களை அவர்கள் முட்டாளாக்க முடியாது என குறிப்பிட்டார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,




