விடுதலைப்புலிகளே வடக்கின் விவசாயத் துறையை அழித்தனர்! விஜயதாச ஆவேசம்
அரசு மேற்கொள்ளும் வேலைத் திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வரும் இவ்வேளையில், இனவாதத்துடன் செயற்படும் தமிழ் அரசியல்வாதிகளே அதற்கு ஒத்துழைப்பதில்லையென நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
வடக்கின் விவசாயத்துறை பாதிப்புக்கு தற்போதுள்ள நாட்டின் தலைவரோ இதற்கு முன்பு இருந்த தலைவரோ பொறுப்பல்ல.
விடுதலைப்புலிகளே வடக்கின் விவசாயத் துறையை அழித்தனரென்றும் அமைச்சர் தெரிவித்தார். அரசாங்கம் ஒருபோதும் இனவாதத்துடன் செயல்படுவதில்லையென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வடக்கிலுள்ள தொழிற்சாலைகளின் உபகரணங்களையும் கொண்டு சென்றவர்கள் புலிகளே. இதையும் தமிழ் அரசியல்வாதிகள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,