ராஜபக்சர்கள் தொடர்பில் ஹரிணி கூறிய உண்மையால் அநுர தரப்பிற்குள் மோதல் நிலை! பதவி பறிபோகலாம்
பிரதமர் ஹரிணி கூறிய சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து, அநுர அரசாங்கத்திற்குள் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினுடைய இளைய மகனான ரோஹித ராஜபக்ச விண்ணிற்கு செலுத்திய செய்மதி தொடர்பில் பிரதமர் ஹரிணி கூறிய உண்மையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதா ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
இதனை காரணமாகக் கொண்டு பிரதமர் பதவியில் இருந்து ஹரிணியை நீக்குவதற்கு ஒரு தரப்பினர் முயற்சி செய்து வருவதாகவும் அரசியல் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
அநுர அரசாங்கம்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காரியாலயத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்த தலைமை காரியாலயத்தில் உடைந்து விழுந்த ரொக்கெட் பற்றி விசேட அவதானம் செலுத்த வேண்டும்.
உண்மையை நீண்டகாலம் மறைத்து வைக்க முடியாது என்பது பௌத்த மத அற கோட்பாடாகும். மதம் மீது நம்பிக்கையில்லாத இந்த அரசாங்கத்துக்கு மத கோட்பாடுகளே இன்று எதிராக முடிந்துள்ளது.
ரோஹிதவின் ரொக்கெட்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய மகனை தொடர்புபடுத்தி இதுவரை காலமும் முன்வைத்த குற்றச்சாட்டை பிரதமர் ஹரிணி அமரசூரிய பொய்யாக்கியுள்ளார்.
ரொக்கெட் பற்றி பிரதமர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திய உண்மை மக்கள் விடுதலை முன்னணிக்குள் பாரிய முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்திக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான முரண்பாடு தற்போது தீவிரமடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
போலியான வாக்குறுதிகள் மற்றும் வெறுப்பு பேச்சுக்களினால் தாம் ஏமாற்றப்பட்டதை மக்கள் விளங்கிக்கொண்டுள்ளார்கள். அரசாங்கத்தின் போலியான செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் வெகுவிரைவில் அணிதிரள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 2 நாட்கள் முன்

கிளைமேக்ஸ் மற்றும் அந்த 20 நிமிடம், ரஜினியின் கூலி படம் பற்றி வந்த முதல் விமர்சனம்... மாஸ் போங்க Cineulagam

நாங்கள் அழிந்தால்…பாதி உலகை சேர்த்து அழித்து விடுவோம்! உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் அச்சுறுத்தல் News Lankasri

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam
