புதிய கடவுச்சீட்டு பெற முற்கூட்டியே நேரம் ஒதுக்கியவர்ளுக்கு முக்கிய தகவல்
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக ஏற்கனவே நேரத்தை ஒதுக்கியவர்களுக்கும் புதிய விலைகள் பொருந்தும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெறுவதற்கான தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பெருமளவு மக்கள் கடவுச்சீட்டை பெற நேரத்தை ஒதுக்கியுள்ளனர். எனினும் அவர்களுக்கும் இந்த புதிய கட்டணமே அறவிடப்படும். கட்டணம் அதிகரிக்கப்படும் என்ற செய்திக்கு பின்னர் பலரும் நேரம் ஓதுக்கிக் கொண்டுள்ளனர்.
எனினும் இன்று முதல் வழங்கப்படும் கடவுசீட்டுகள் அனைத்திற்கும் கட்டணம் அறவிடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள மேலதிகமாக ஐயாயிரம் ரூபா செல்லப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
