இந்திய கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்
இலங்கை கடற்படையினர் கற்களை கொண்டு தாக்கியதில் இராமேஸ்வர கடற்றொழிலாளர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக இராமேஸ்வரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம்(25.09.2023) இடம் பெற்றுள்ளதாக இராமேஸ்வரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று (25.09.2023) மாலை கடற்றொழிலுக்கு அனுமதி சீட்டு பெற்று சுமார் 50ற்க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கச்சதீவு அருகே கடற்றொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அப்பகுதிக்கு உளவு பணிக்கு வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறி இராமேஸ்வரத்தை சேர்ந்த ஒரு விசைப்படகு மீது கற்கள் கொண்டு தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது அப்படகில் இருந்த பிராங்கிளின் என்ற கடற்றொழிலாளர் படுகாயமடைந்தநிலையில் இராமேஸ்வரம் அரசு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படுகாயம் அடைந்த கடற்றொழிலாளரிடம் மத்திய, மாநில உளவு பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கபபடுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




