இலங்கை கிரிக்கெட் தடை செய்யப்பட்டால் இதுவே நடக்கும்: விளையாட்டுத்துறை அமைச்சர் சபையில் பகிரங்க அறிவிப்பு
சில காரணங்களால் இலங்கை கிரிக்கெட் தடை செய்யப்பட்டால் 6 மாத காலத்திற்கு அர்ஜுன ரணதுங்கவிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு உத்தியோகபூர்வ தேர்தல் நடத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போது, இலங்கை கிரிக்கெட் அணியை சர்வதேச தடைக்கு உட்படுத்தும் முயற்சி இடம்பெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளோம்
மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் திங்கட்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் செல்லவுள்ளோம்.
அதிலிருந்து நீதியை எதிர்பார்க்கின்றோம். எவ்வாறாயினும், சட்டமா அதிபர் மீது வைத்துள்ள நம்பிக்கை தற்போது உடைந்துள்ளது.
எனவே தனிப்பட்ட சட்டத்தரணிகள் ஊடாக இந்த விடயத்தை கையாள்கிறோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |