முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு சஜித்துக்கே: தௌபிக் எம்.பி ஆரூடம்
இந்த ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இருக்கும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபிக் தெரிவித்துள்ளார்.
தற்போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒற்றுமையின் வேகத்துடன் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
இந்நிலையில், யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் தமது கட்சியின் அதியுயர் சபை இறுதித் தீர்மானத்தை எட்டவில்லை என்றாலும், எதிர்க்கட்சித் தலைவருக்கு அதியுயர் சபை ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் இணைந்து செயற்படுவதால், எதிர்க்கட்சித் தலைவருக்கு உச்ச சபையின் ஆதரவும் கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
முடக்கப்பட்டுள்ள நிதியைத் தொட்டுப்பாருங்கள்... ஐரோப்பாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த புடின் News Lankasri
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கண்ணே கலைமானே சீரியல் நடிகை... எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா? Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam