பாரிய பொருளாதார பேரழிவை நோக்கி மீண்டும் வேகமாக நகரும் இலங்கை..! ரணில் அபாய எச்சரிக்கை

Dollar to Sri Lankan Rupee Ranil Wickremesinghe Sri Lankan Peoples India Economy of Sri Lanka
By Rakesh May 31, 2026 12:58 PM GMT
Report

"தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற மற்றும் பலவீனமான பொருளாதார கையாளுமைகளால் நாடு மீண்டும் ஒருமுறை பாரிய பொருளாதார ஆபத்தை நோக்கி மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது" என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் டொலர் நெருக்கடி குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் தற்போதைய ஆட்சியாளர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சென்னையை உலுக்கிய இலங்கை தமிழ் பெண் கொடூர கொலை! விசாரணையில் வெளியான தகவல்

சென்னையை உலுக்கிய இலங்கை தமிழ் பெண் கொடூர கொலை! விசாரணையில் வெளியான தகவல்

தவறவிட்டுள்ள டொலரின் கட்டுப்பாடு

"இலங்கை ரூபாவை நிலையான முறையில் வலுப்படுத்துவதே எனது கடந்தகால பொருளாதாரக் கொள்கையின் முதன்மையான நோக்கமாக இருந்தது. தற்போதைய ஆட்சியாளர்கள் ஆரம்பத்திலேயே டொலரின் கட்டுப்பாட்டைத் தவறவிட்டுள்ளனர்.

பாரிய பொருளாதார பேரழிவை நோக்கி மீண்டும் வேகமாக நகரும் இலங்கை..! ரணில் அபாய எச்சரிக்கை | Sri Lanka Moving Economic Danger Ranil Warning

அரசு ஆரம்பத்திலிருந்தே டொலரின் மதிப்பை 280 ரூபா மட்டத்தில் தக்கவைப்பதற்கான முறையான முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யத் தவறிவிட்டனர்.

இன்று டொலர் 320 ரூபா வரை சென்றுவிட்டது. அதாவது 30 ரூபாவால் அதிகரித்துள்ளது. இப்போது இந்த டொலர் பற்றாக்குறையை எவ்வாறு முன்னோக்கிக் கொண்டு செல்வது என்று தெரியாமல் நிதி அமைச்சும் மத்திய வங்கியும் திண்டாடுகின்றன.

வெளிநாட்டு கையிருப்புப் பற்றாக்குறை என்பது ஒரு நாட்டுக்கு ஏற்படும் மிகப்பெரிய வருமானப் பற்றாக்குறையாகும். இந்த நெருக்கடிக்கு மிக விரைவாகத் தீர்வு காணாவிட்டால் நாடு மீள முடியாத பேரழிவைச் சந்திக்கும்.

நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பின்னடைவானது, கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனுக்குக் கால் உடைந்ததைப் போன்றது. அவன் நடந்து சென்று சிகிச்சை பெறுவதற்காக எனது ஆட்சிக்காலத்தில் அவனது உடைந்த காலைக் குணப்படுத்திக்கொடுத்தேன்.

மருத்துவமனைக்குச் சென்ற பின்னர், 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவனுக்குரிய பிரதான அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் அதைச் செய்யவில்லை. இப்போது ஆபத்தான நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் உள்நாட்டு எதிர்ப்பு

நான் ஆட்சியில் இருந்தபோது இலங்கையை உலகப் பொருளாதாரத்துடன் இணைக்க எடுத்த தொலைநோக்கு முயற்சிகள் அனைத்தும் குறுகிய அரசியல் மற்றும் உள்நாட்டு எதிர்ப்புகளால் முறியடிக்கப்பட்டன.

இந்தியாவுடன் இணைந்து சேதுசமுத்திரம் திட்டத்தையும், இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்வழிப் பாலத்தையும் அமைக்க முழு முயற்சி எடுத்தேன். அந்தத் திட்டங்கள் மட்டும் தொடங்கப்பட்டிருந்தால், சுமார் பத்து வருடங்களுக்கு நாட்டில் கட்டுமானப் பணிகள் தொடர்ச்சியாக நடந்திருக்கும். அதன் மூலம் 5 டிரில்லியன் ரூபா பெறுமதியான பொருளாதாரம் நமது நாட்டுடன் இணைந்திருக்கும்.

பாரிய பொருளாதார பேரழிவை நோக்கி மீண்டும் வேகமாக நகரும் இலங்கை..! ரணில் அபாய எச்சரிக்கை | Sri Lanka Moving Economic Danger Ranil Warning

அதேபோல், இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் தரைவழியாக எரிபொருள் குழாய் இணைப்பை ஏற்படுத்துவதற்கும் திட்டமிட்டிருந்தேன். போலி காரணங்களைக் கூறி அதற்கும் இடம் கொடுக்கவில்லை. அதைச் செய்திருந்தால், இந்தியாவுக்குக் கிடைக்கும் அதே குறைந்த சர்வதேச விலையிலேயே நமக்கும் தங்குதடையின்றி எரிபொருளைப் பெற்றிருக்க முடியும்.

தற்போதைய ஆட்சியாளர்கள் வர்த்தக வங்கிகளுக்குக் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்துள்ளனர். டொலரின் மதிப்பை 330 ரூபாவுக்கு மேல் அதிகரிக்கக் கூடாது என வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர்.

விரைவில் சர்வதேச நிதியுதவியாக 1 பில்லியன் டொலர் நாட்டுக்கு வரவுள்ளதாகக் கூறியே இந்தத் தற்காலிக அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றார்கள். ஆனால், 1 பில்லியன் டொலர் சந்தைக்குள் வந்தாலும் பெரிய கட்டமைப்பு மாற்றம் எதுவும் நடந்துவிடாது.

உலகச்சந்தையில் திடீரென அதிகரித்த எண்ணெய் விலை

இன்று உலகப் பொருளாதாரம் மாறிவிட்டது. சர்வதேச யுத்தச் சூழல் காரணமாக உலகச் சந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று இந்தியாவுக்கே பொருளாதாரத்தை நகர்த்துவது சவாலாக உள்ளது.

பாரிய பொருளாதார பேரழிவை நோக்கி மீண்டும் வேகமாக நகரும் இலங்கை..! ரணில் அபாய எச்சரிக்கை | Sri Lanka Moving Economic Danger Ranil Warning

உலகச் சந்தையில் திடீரென கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 10 டொலரால் உயர்கின்றது. இத்தகைய உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், இவர்கள் முழு மூச்சாக டொலரைச் செயற்கையாகக் கட்டுப்படுத்தப் பார்க்கின்றார்கள்.

டொலர் மதிப்பைச் செயற்கையாக ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. இன்னும் சில காலம் சென்றதும் டொலரின் மதிப்பு மீண்டும் சந்தை விதிகளுக்கமைய வேகமாக உயர்ந்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை அதிகரிக்கச் செய்யும்." என்றார்.

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

பெரும் சிக்கலில் டுபாயில் பதுங்கியிருக்கும் ஆபத்தான இலங்கையர்கள்.! இரகசியமாக நாட்டை விட்டு தப்பியோட முயற்சி

பெரும் சிக்கலில் டுபாயில் பதுங்கியிருக்கும் ஆபத்தான இலங்கையர்கள்.! இரகசியமாக நாட்டை விட்டு தப்பியோட முயற்சி

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US