இலங்கை கல்வியில் அரசியல் தலைவர்களின் ஆதிக்கம்! தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் தலைவர்
கல்வி என்பது சுயாதீனமாக இயங்க வேண்டும் ஆனால் நாட்டில் கல்வியை பொறுத்தவரை அரசியல் தலைவர்கள், கல்வியில் ஆதிக்கம் காணப்படுகின்றது என்று தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் புயல் நேசன் தெரிவித்தார்.
இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம்(14) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
அரசாங்கத்தின் ஆட்சி
மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ஒன்று கூறுகின்ற பிரதமர் ஒன்று கூறுகின்றார், வடமாகாண கல்வி மற்றும் செயலாளர். ஒன்றை கூறுகின்றார் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வேறு ஒன்றை கூறுகின்றார் அரசியல் உயர் மட்டங்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி கல்வி கட்டமைப்பில் தலையீடு செய்கின்றனர்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரம் முன்னர் தனியார் கல்வியை இல்லாத செய்வோம் என கூறியவர்கள் தற்போது ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடசாலைகளை தனியார் மையப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர் இது முற்றாக மாற்றப்பட வேண்டும்.
வடமாகாணத்தில் கல்வியில் அரசியல் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் புதிய கல்வி மாற்ற கொள்கை தொடர்பில் எதிர்காலத்தில் நாங்கள் அதனை வரவேற்கின்றோம். தற்பொழுது அதில் ஒரு சந்தேகம் காணப்படுகின்றது.
மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு தெளிவின்மை காணப்படுகின்றது. அதனை அரசாங்கம் சரியான முறையில் புரிய வைக்க வேண்டும் அதன் பின்னர் புதிய கல்வி சீர்திருத்த கொள்கை கொண்டு வருவது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam