ஏற்றுமதி செய்யப்படும் இலங்கை குரங்குகள்! காரணத்தை வெளியிட்ட சீன நிறுவனம்
சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளில் கண்காட்சிக்காக இலங்கை குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் சீன நிறுவனம் ஒன்று விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் முன்மொழிவை விவசாய அமைச்சர், அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதுடன் பிரேரணையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய அமைச்சரவை உபகுழு நியமிக்கப்படவுள்ளது.
இறுதி தீர்மானத்தின் அடிப்படையில் குரங்குகள் ஏற்றுமதி
மேலும் அமைச்சரவை உப குழு வழங்கும் இறுதி தீர்மானத்தின் அடிப்படையில் குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான பிரேரணை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை குறித்த சீன நிறுவனம் முதலில் 500 குரங்குகளை வழங்குமாறு விவசாய அமைச்சிடம் கோரியிருந்த போதிலும் தற்போது 1500 குரங்குகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நிறுவனம் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 100,000 குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.





என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் நேரம் திடீர் மாற்றமா?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
