நாணய மாற்று தொடர்பான கட்டுப்பாட்டை நீக்கும் மத்திய வங்கி
நாணய மாற்று வீதம் தொடர்பில் நடைமுறைப்படுத்திய கட்டுப்பாட்டை இலங்கை மத்திய வங்கி நீக்கத் தீர்மானித்துள்ளது.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் ஏற்றுமதி வருமானம் பெறுபவர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகை டொலர்களை இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் இருந்தது.

இந்நிலையில் இம்மாதம் முதல் இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து தற்போது பெறப்படும் வருமானத்தின் அளவு காரணமாக ஏற்றுமதி வருமானத்தின் ஒரு பகுதியை இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டிய அவசியமில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சமகாலத்தில் அமெரிக்க டொலர்களின் உட்பாய்ச்சல் அதிகரித்துள்ள நிலையை கருத்திற் கொண்டு கட்டுப்பாட்டை நீக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri