இலங்கையை அடுத்த ஐந்தாண்டுகளில் கண்ணிவெடியற்ற நாடாக மாற்ற திட்டம்
இலங்கையை அடுத்த ஐந்தாண்டுகளில் கண்ணிவெடியற்ற நாடாக மாற்றுவதற்கு ஹலோட்ரஸ் மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் ஹன்னா எலிசபெத் பிக்டன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று(09.10.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் ஹேலோ ரஸ்ட் உலகளவில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் ஒரு உலகளாவிய அமைப்பாகும்.
கண்ணிவெடி அகற்றும் பணி
2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கி வரும் இவ்வமைப்பு, 2011 ஆம் ஆண்டு முதல் முஹமாலையில் (Muhamalai) 6 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கையால் கண்ணிவெடிகளை அகற்றுபவர்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிலங்கள் பகுதி பகுதியாக கையளிக்கப்பட்டு வருகின்றன.

1996 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக முஹமாலை பகுதியிலிருந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு நீண்டகாலம் இடம்பெயர்ந்து வாழும் நிலை ஏற்பட்டது.
கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இடம்பெயர்ந்த கடைசி சில குடும்பங்களும் மீண்டும் தங்கள் சொந்த நிலங்களுக்குத் திரும்பி மீள்குடியேற முடிந்துள்ளது.
அபாயமற்ற நாடு
இலங்கையை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கண்ணிவெடி அபாயமற்ற நாடாக மாற்ற அரசுடன் இணைந்து ஹேலோ டிரஸ்ட் மற்றும் பிற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தை 2027 ஆம் ஆண்டிற்குள் கண்ணிவெடிகள் அற்ற பகுதியாக அறிவிப்பதே முதன்மை இலக்காகும்.
இதற்காக முகமாலை மற்றும் கிளிநொச்சி பகுதிகளிலுள்ள நிலங்களை மீட்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. நிலப்பரப்புகளைக் ஒப்படைத்த பிறகும், ஆபத்து விழிப்புணர்வு கல்வியை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

மேலும், அரசால் வழங்கப்படும் வீட்டு வசதிகள் மற்றும் விவசாய நில மேம்பாடுகளுக்கு உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து உதவி வழங்கி வருகின்றனர்.
அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, நோர்வே, ஜப்பான் உள்ளிட்ட நன்கொடையாளர்களின் ஆதரவினால் மட்டுமே இத்திட்டங்கள் சாத்தியமாகியுள்ளன என தெரிவித்தார்.
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan