நாளைய தினம் வங்கிக் கணக்குகளுக்கு வரப்போகும் பணம் - வெளியான அறிவிப்பு
1,415,738 பயனாளி குடும்பங்களுக்கான நவம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவுகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, 11.2 பில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட நிதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளன.
இந்த நடவடிக்கை நாளைய தினம் (13.11.2025) என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
நலன்புரி திட்டம்
இதேவேளை அஸ்வெசும (Aswesuma) என்பது இலங்கையின் முக்கிய நலன்புரி திட்டமாகும், இது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்திர கொடுப்பனவுகளை வழங்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) அஸ்வெசும திட்டத்தின் வருடாந்த தகவல் புதுப்பிப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தது.

உண்மையற்ற தகவல்
இது பயனாளிகளின் தகவல்களை சரிபார்த்து, தவறான பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் திட்டம் நிறுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் போலி செய்திகள் உண்மையல்ல என சபை தெளிவுபடுத்தியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri