கொழும்பில் 5 வயது மகனுடன் வீதியில் தந்தை! பின்னணியில் பெரும் அவலநிலை(Video)
கொழும்பு ,இது இலங்கையின் சனத்தொகை அடிப்படையில் மிகப் பெரிய நகரமும், வர்த்தகத் தலை நகரமும் ஆகும். உலகவர்தக மையம்(WTC),துறைமுக நகரம்(Port City),அண்மையில் மக்களுக்காக திறக்கப்பட்ட தாமரை கோபுரம்(Lotus Tower) என ஏராளமான பிரம்மாண்ட கட்டிடங்களை கொண்டதுதான் இந்த கொழும்பு நகரம்.
கொழும்பிற்குள் நுழைந்ததும் முதலில் எமக்கு காணக்கிடைப்பது தொடலங்க எனும் பகுதிதான். இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலும் வசதி குறைந்தவர்கள். வீடுகளில் இருப்பவர்களை விட வீடுகள் இல்லாமல் வீதிகளில் இருப்பவர்களே அதிகம்.
சரியான தொழில் இல்லாமல், சரியான வருமானம் இல்லாமல், வாழ்க்கையை பெரும் கஷ்டத்தில் கொண்டு செல்லும் மக்கள் தான் இங்கு அதிகம். இன்னும் சற்று உள்ளே சென்று பார்த்தால் கொழும்பிற்கு வராமலே இருந்திருக்கலாம் என எண்ணத்தோன்றும்.
காரணம், ஒரு பக்கம் வறுமையில் வாடும் மக்கள், மறு பக்கம் போதைபொருள் பாவனையால் சீரழியும் மக்கள். ஒரு பக்கம் உழைக்க வழியில்லாமல் கஷ்டப்படும் மக்கள், மறு பக்கம் உழைத்தும் வாழமுடியாத மக்கள்.
இப்படி பல பக்கங்களை பிரதானமாக கொண்டு தான் இந்த கொழும்பு இயங்கிக்கொண்டு இருக்கின்றது.
இப்படியான சமுதாயத்தில் கடும் கஷ்டங்களுக்கு மத்தியில் வாழும் பலரை பற்றி லங்காசிறி நாம் தேடி பார்க்க ஆரம்பித்துள்ளோம். அவர்களுக்கு உதவும் திட்டங்களையும் ஆரம்பித்துள்ளோம்.
அந்தவகையில் இந்த வார லங்காஸ்ரீயின் தேடல் நிகழ்ச்சியில்,