தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்வோரின் பட்டியலில் இலங்கை முன்னணி
உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, தவறான முடிவு எடுத்து உயிரை மாயத்துக் கொள்ளும் பட்டியலில் இலங்கை இன்னும் முன்னணியில் இருப்பதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சாத்தியமான நடவடிக்கை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அதன்படி 1996-1997 ஆம் ஆண்டுகளில் உலகில் அதிகளவான தற்கொலைகள் இடம்பெற்ற நாடாக இலங்கை இருந்தது. தற்போது நிலைமை மேம்பட்டுள்ள போதிலும், நாடு இன்னமும் திருப்திகரமான நிலையில் இல்லை.
குறிப்பாக தானே தனது உயிரை மாய்த்துக் கொள்ள துண்டும் காரணிகள் பல உள்ளன. அந்த சூழ்நிலைகளை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும் ஏனைய துறைகளின் ஒத்துழைப்புடன் இந்த நிலைமையை மேம்படுத்த சுகாதார அமைச்சு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 8 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
