கச்சதீவு விவகாரம்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
''இந்தியப் பிரிவினைக்கு காங்கிரஸ் தான் காரணம்'' என பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1974ஆம் ஆண்டு கச்சதீவை இலங்கைக்கு இந்திரா காந்தி அரசாங்கமே வழங்கியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
''காங்கிரஸ் கட்சி அரசியலுக்காக இந்தியாவை மூன்றாகப் பிரித்தார்கள்'' என்று மக்களவையில் மோடி தலைமையிலான அரசாங்கம் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இந்தக் குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், கச்சதீவை இந்தியாவுக்குக் கொண்டு வர வலியுறுத்தி, தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் தொடர்ந்து கடிதம் எழுதி வருவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
இந்தோ - இலங்கை கடல்சார் ஒப்பந்தம்
இந்தியா மற்றும் இலங்கை இடையே அமைந்துள்ள இந்த தீவு, பாரம்பரியமாக இலங்கை மற்றும் இந்திய கடற்றொழிலாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
1974ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி "இந்தோ - இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின்" கீழ் கச்சதீவை இலங்கையின் பிரதேசமாக ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
