கெசினோக்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் இலங்கையும் இணைவு
உலகில் கெசினோக்களுக்கு (Casinos) அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை (Sri Lanka) மாறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
கெசினோக்கள் தொடர்பான வரித் திருத்தங்கள் மீதான நாடாளுமன்ற விவாதத்தின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஆட்சியின் கீழ், அரச வருவாயில் 60 வீதமானவை சூதாட்ட விடுதிகளின் மூலம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
விற்பனை வரி
முன்னதாக கெசினோக்களில் இருந்து வருமான வரி மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது.

எனினும் புதிய நடவடிக்கைகளின்படி, உரிமக் கட்டணமாக 500 மில்லியன் ரூபாய்களும், ஆண்டு புதுப்பித்தல் கட்டணமாக 500 மில்லியன் ரூபாய்களும் அறிவிடப்பட்டு வருகின்றன.
அத்துடன் 15 வீத விற்பனை வரியும் அறிவிடப்பட்டு வருகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உத்தேச வாடகை வருமான வரி, இலங்கையின் 90 வீத மக்களுக்கு நன்மை பயக்கும் என்றும், செல்வந்தர்களில் 10 வீதமானோர் மட்டுமே குறித்த வரிக்கு உட்படுவார்கள் என்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 3 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan