உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு
இந்த ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு (Advanced Level Examination) விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்படாது என்பதால் அதற்கு முன்னரே விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் கோரியுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 10ஆம் திகதி வரை இணைய வழியூடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் 'www.doenets.lk' அல்லது 'www.onlineexams.gov.lk' ஆகிய இணையத்தளங்களுக்குச் சென்று விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.
மேலதிக தகவல்கள்
மேலும், அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் குறித்த பாடசாலையின் அதிபர் மூலம் விண்ணப்பங்களை நேரில் அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பான மேலதிக தகவல்களை பரீட்சைத் திணைக்களத்தின் நேரடித் தொலைபேசி எண் 1911 அல்லது வழமையான தொலைபேசி எண்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
