சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நினைவாக சிறப்பு நாணயத்தை வெளியிடவுள்ள இலங்கை
எதிர்பார்க்காத நகர்வாக, இலங்கை, வெளிநாட்டு அரசியல் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சி (சிபிசி) நூற்றாண்டு நினைவாக ஒரு சிறப்பு நாணயத்தை வெளியிடவுள்ளது.
மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் இந்த முடிவை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், ஆனால் விபரங்களை வழங்கவில்லை என கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளுடனான இராஜதந்திர உறவுகளின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைக் குறிக்கும் வகையில் நினைவு நாணயங்களை வெளியிடுவது இலங்கை மத்திய வங்கியின் நடைமுறையாக இருந்து வருகிறது.
எனினும் , முதன்முறையாக ஒரு வெளிநாட்டு அரசியல் கட்சிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. சீன கம்யூனிசக் கட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களுக்கான ஒரு நல்லெண்ண செயலாக, சீனா நாணயங்களை அச்சிட்டு, இலங்கை மத்திய வங்கி அவற்றைப் பிற நட்பு நாடுகளுக்கு வழங்க வாய்ப்புள்ளது.
இந்த நாணயம் ஒரு புழக்கத்தில்லாத நினைவு நாணயம் மாத்திரமா? அல்லது புழக்கத்தில் இருக்கும் நிலையான நினைவு நாணயமாக இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சீன கம்யூனிஷக்கட்சியின் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக நினைவு நாணயங்களின் தொகுப்பை வெளியிடச் சீனாவின் மத்திய வங்கி திங்களன்று வெளியிட்டது.
இந்த தொகுப்பில் ஒன்பது நாணயங்கள் உள்ளன, அவற்றில் மூன்று தங்கம், ஐந்து வெள்ளி, மற்றும் ஒரு செப்பு நாணயம் ஆகியவை உள்ளதாக என்று பீப்பிள்ஸ் பேங்க் ஒஃப் சீனா அறிவித்தது.
மூன்று தங்க நாணயங்கள், ஒவ்வொன்றும் 8 கிராம் நிறையைக் கொண்டவையாகும்.
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri