காலநிலை பாதிப்புக்குள்ளான நாடுகளில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்
காலநிலைப் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்திலுள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலையில், இன்று (09.08.2023) இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெப்பநிலை அதிகரிப்பு
காலநிலை என்பது ஆரம்ப காலங்களில் அறிவியலைச் சார்ந்ததாகக் காணப்பட்டாலும் தற்போது எமது வாசலிலுள்ள பிரச்சினையாக மாறியுள்ளது.
உலகளலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அமைப்பின் அறிக்கையின்படி 2022 காலநிலைப் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்திலுள்ளது.
மேலும் மழைவீழ்ச்சி, வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் அதிகரித்த ஆவியாக்கம் போன்ற பாதிப்புக்களால் வடமாகாணம் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொள்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |