உலகில் மிகக் குறைந்த வரி விதிக்கும் நாடுகளில் இடம்பிடித்துள்ள இலங்கை
உலகில் மிகக் குறைந்த வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக நாம் பெயரிடப்பட்டுள்ளோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க(Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின்(America) வொஷிங்டனில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் அமர்விற்கு இணைந்ததாக இடம்பெற்ற நேர்காணலில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வரி செலுத்த வைக்க வேண்டும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கையின் கடனின் நிலையான தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து கடன் வழங்குநர்களுடனும் கொள்கை ரீதியான உடன்படிக்கையை எட்ட முடியும் என அரசாங்கம் நம்புகின்றது.

உலகில் மிகக் குறைந்த வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக நாம் பெயரிடப்பட்டுள்ளோம். ஆனால் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், நாங்கள் படிப்படியாக வரி வருவாயை அதிகரித்துள்ளோம். நாம் இப்போது வரி செலுத்துவதில் இருந்து விலக்கை நீக்கியுள்ளோம். வரி இணக்கத்தை வலுப்படுத்தியுள்ளோம்.
2023 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து அரசாங்கத்தின் வருமானம் 11% ஆக அதிகரித்துள்ளது, இது அரசாங்கத்தின் வருமானத்தில் 8.1% ஆகும். "2024 ஆம் ஆண்டுக்குள், அந்த எண்ணிக்கை 12% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலும் அந்த இலக்கை எங்களால் அடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். தற்போது, வரி இணக்கம் 130% வளர்ச்சியை எட்டியுள்ளது."
"வரி தொடர்பான பதிவு செய்தலும் அதிகரித்துள்ளது.. நல்ல எண்ணிக்கையாக இருந்தாலும் திருப்தி அடைய முடியாது. வரி செலுத்த வேண்டியவர்கள் அனைவரையும் வரி செலுத்த வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam