உலகில் 5 நாடுகளில் இடம்பிடித்த இலங்கை
உலகில் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான ஐந்து நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது வெகுவாக அதிகரித்துள்ளதாகவும், இது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாரிய பின்புலமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த சில மாதங்களாக அதிகளவு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு படையெடுத்துள்ளதுடன், தினமும் கிட்டத்தட்ட 3,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும், இதற்காக 22 விமான நிறுவனங்கள் தற்போது இயங்கி வருவதாகவும் கூறப்படுகின்றது.
சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்ப சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் அறைகளின் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் போக்குவரத்து தடை? - அமைச்சர் முன்வைத்துள்ள யோசனை (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam