கடனை செலுத்த இன்னும் இலங்கை தயாராகவில்லை! சஜித் சுமத்தும் குற்றச்சாட்டு
இலங்கையின் ஏற்றுமதியில் கணிசமான பகுதி அமெரிக்க சந்தைக்கு அனுப்பப்படுகின்றன. எனினும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ் விதிக்கப்பட்ட பழிவாங்கும் வரிகள் காரணமாக இந்த ஏற்றுமதிகள் தற்போது கடுமையான போட்டியை எதிர்கொள்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
மற்ற நாடுகள் அமெரிக்க பொருளாதார கொள்கை வகுப்பாளர்களுடன் பேச்சு நடத்தி இந்த வரிகளின் தாக்கத்தைக் குறைக்க பரஸ்பர புரிதல் ஒப்பந்தங்களை எட்டியுள்ளன எனினும் இலங்கையின் பொருளாதாரத் தலைவர்களும் தொழில்துறை பிரதிநிதிகளும் அதைச் செய்யத் தவறிவிட்டனர் என்றும் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
வெளிநாட்டு கடன்
இலங்கை தனது வெளிநாட்டு கடனை 2028 ஆம் ஆண்டுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.
இந்தநிலையில், தற்போதைய நிர்வாகம் முன்னைய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து செயற்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை தமது கடனை திருப்பிச் செலுத்தவேண்டுமானால், 5 வீத பொருளாதார வளர்ச்சி விகிதம் அவசியமாகும். எனினும் இந்த ஆண்டுக்கான திட்டமிடப்பட்ட வளர்ச்சி 3.5வீதம் மட்டுமே என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
