சர்வதேச ரீதியில் பாரிய கடனில் சிக்கிய இலங்கை
தற்போதைய அரசாங்கமானது மோசடியாளர்களுக்கு இடமளிக்கின்றதாகவே காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
தற்போதைய அரச தலைவரின் செயலாளரான பி.பீ.ஜயசுந்தர, 2017ஆம் ஆண்டில் 30000 கோடி ரூபா மோசடி தொடர்பான வழக்கில் ஐந்து இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டவர்.
அதேபோல மோசடிக்கு காரணமானவர் என நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட இந்த அரசாங்கத்தினால் இந்தியாவிற்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனூடாக தற்போதைய அரசாங்கமானது, மோசடியாளர்களுக்கு இடமளிக்கின்றதாகவே காணப்படுகிறது.
சீனாவுக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்பட்டதால் சர்வதேச ரீதியில் இலங்கை பாரிய கடனில் சிக்கியது என குறிப்பிட்டுள்ளார்.
