இலங்கை கலவர பூமியாக மாறும் அபாயம்! ஆளும் தரப்பு எம்.பி தகவல் (செய்திகளின் தொகுப்பு)
இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு முடிந்து பூச்சியமாகி, நாட்டில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார்.
பன்னிப்பிட்டிய வீர மாவத்தையில் ஐக்கிய பொதுச் சேவை சங்கத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்ட போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
''அடுத்த சில வாரங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்க முடியாத நிலைமைக்கு அரசாங்கம் மாறும். இதனை அடுத்து நாட்டிற்குள் கலவரமான நிலைமை ஏற்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,