இலங்கை மிகவும் ஆபத்தான நிலைமையில் உள்ளது - பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண எச்சரிக்கை
இலங்கையில் தற்போது வேகமாக பரவும் கொரோனா பரவலை நிறுத்துவதென்றால் முழு நாட்டையும் தொடர்ந்து 14 நாட்டுகள் முடக்க வேண்டும் என பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன தெரிவித்துள்ளார்.
நாட்டை முடக்கவில்லை என்றால் இந்த நிலைமையை ஒரு போது கட்டுப்படுத்த முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று நாட்கள் மூடி திறந்து மீண்டும் மூடுவதனால் எவ்வித பயனும் இல்லை என அவர் கூறியுள்ளார்.
விசேட வைத்தியர்களினால் 14 நாட்கள் தொடர்ந்து நாட்டை மூடுமாறு கூறுவதற்கு காரணம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு தற்போது மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. மேலும் ஆபத்தான நிலைமையை நோக்கி வேகமாக பயணிக்க கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
இந்நிலைமையை இந்த நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam