வெட்கமின்றி கையேந்தும் ஆட்சியாளர்கள்! கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இலங்கை
டொலர் பற்றாக்குறை காரணமாக நிதி ரீதியில் நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளது. ஆட்சியாளர்கள் சிறிதும் வெட்கமின்றி வெளிநாடுகளிடம் கையேந்துகின்றனர். அதன்விளைவாக நாட்டின் கௌரவத்திற்கும் நன்மதிப்பிற்கும் களங்கம் ஏற்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
இரசாயன உர இறக்குமதி தடைசெய்யப்பட்டமையை அடுத்து நாட்டின் விவசாயத்துறை முழுமையாக வீழ்ச்சிகண்டுள்ளது. முன்னொருபோதுமில்லாத அளவிற்கு விவசாயிகள் ஜனாதிபதியைத் தூற்றுகின்றனர். விவசாயத்துறையின் வீழ்ச்சியினால் வெகுவிரையில் உணவுப்பற்றாக்குறை ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பயிர்ச்செய்கைக்கு சேதன உரத்தை மாத்திரம் பயன்படுத்துவது குறித்துப் பேசிய அரசாங்கம், இப்போது அதிகளவில் இரசாயன உரத்தைப் பயன்படுத்தும் நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்கின்றது. இவையனைத்தும் எதிர்வருங்காலங்களில் இலங்கையில் மந்தபோசணையினால் பாதிக்கப்பட்ட சந்ததியொன்று உருவாவதற்கு வழிவகுக்கும்.
இன்றளவிலே நாட்டில் மக்கள் வாழமுடியாத நிலையொன்று உருவாகியிருக்கின்றது. அத்தியாவசியப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்குக்கூட மக்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அன்றாட வாழ்க்கைச்செலவு வெகுவாக அதிகரித்திருப்பதுடன் பெருமளவானோர் தமது வருமான மார்க்கங்களை இழந்துள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்து நிலவிவரும் நெருக்கடிக்கு இன்னமும் அரசாங்கம் தீர்வு வழங்கவில்லை.
நாட்டின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் கடந்த 1977 ஆம் ஆண்டில் நிலவிய 'வரிசைகளின் யுகம்' அனைவருக்கும் நினைவிலிருக்கும். அப்போது அதனை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டமொன்று காணப்பட்டது. இருப்பினும் தற்போது எந்தவொரு செயற்திட்டமும் இல்லை.
மாறாக உணவுப்பொருட்கள், பால்மா, எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட அநேகமான அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு வரிசைகளில் நிற்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. அதன்காரணமாக மக்களின் நாளாந்த செயற்பாடுகளில் தாமதமேற்படுகின்றது. எனவே இந்த 'வரிசைகளின் யுகம்' மக்களின் வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை மறுபுறம் டொலர் பற்றாக்குறை காரணமாக நிதி ரீதியில் நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளது. ஆட்சியாளர்கள் சிறிதும் வெட்கமின்றி வெளிநாடுகளிடம் கையேந்துகின்றனர். அதன்விளைவாக நாட்டின் கௌரவத்திற்கும் நன்மதிப்பிற்கும் களங்கம் ஏற்படுகின்றது. இலங்கை கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலையில் இருக்கின்றது என்ற விடயம் பரவலாகப் பேசப்படுகின்றது.
கடந்த 2010 - 2015 வரையான காலப்பகுதியிலேயே நாடு கடன்சுமையால் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. நாட்டில் உருவாக்கப்பட்ட எவ்வித இலாபத்தையும் ஈட்டித்தராத அபிவிருத்தித்திட்டங்களே அதற்குப் பிரதான காரணம் என்பதை அனைவரும் நன்கறிவார்கள்.
அவ்வாறு பெறப்படும் கடன்நிதியில் ஊழல்மோசடிகளில் ஈடுபடுவதே அப்போதைய அரசாங்கத்தின் குறிக்கோளாகக் காணப்பட்டது. அதன் முறைகேடான செயற்பாடுகளுக்காக மக்கள் தற்போது அரசாங்கத்திற்கு எதிராகக் கடும் விரோதத்தை வெளிப்படுத்திவருகின்றார்கள்.
அடுத்ததாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதன் காரணமாக நாட்டின் அன்றாட செயற்பாடுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தினமும் 7 - 8 மணிநேரம் வரை மின்விநியோகத்தைத் துண்டிக்கவேண்டிய மிகமோசமான நிலையில் உலகின் வேறெந்த நாடுகளும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தற்போது எரிபொருள் இல்லாததன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. எதிர்வருங்காலங்களின் மின்னுற்பத்திக்கான தேவை காரணமாக நீர்விநியோகம் துண்டிக்கப்படும் நிலை தோற்றம்பெறலாம்.
இந்த எரிபொருள் பற்றாக்குறை மீனவர்கள், விவசாயிகள் உள்ளடங்கலாக பல்வேறு துறைகளைச் சார்ந்து இயக்கக்கூடியவர்களையும் பாதித்திருக்கின்றது.
தற்போது அரசாங்கம் அதற்கு மிகநெருக்கமான வணிகர்கள்மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கோ அல்லது மட்டுப்பாடுகளை விதிப்பதற்கோ தயாராக இல்லை.
அதேபோன்று இரசாயன உர இறக்குமதி தடைசெய்யப்பட்டமையை அடுத்து நாட்டின் விவசாயத்துறை முழுமையாக வீழச்சிகண்டுள்ளது.
முன்னொருபோதுமில்லாத அளவிற்கு விவசாயிகள் ஜனாதிபதியைத் தூற்றுகின்றனர். விவசாயத்துறையின் வீழ்ச்சியினால் வெகுவிரையில் உணவுப்பற்றாக்குறை ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பயிர்ச்செய்கைக்கு சேதன உரத்தை மாத்திரம் பயன்படுத்துவது குறித்துப் பேசிய அரசாங்கம், இப்போது அதிகளவில் இரசாயன உரத்தைப் பயன்படுத்தும் நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்கின்றது.
இவையனைத்தும் எதிர்வருங்காலங்களில் இலங்கையில் மந்தபோசணையினால் பாதிக்கப்பட்ட சந்ததியொன்று உருவாவதற்கு வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 1 மணி நேரம் முன்
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam