உலகில் மிக வேகமாக கோவிட் மரணங்கள் சம்பவிக்கும் நாடாக இலங்கை

Srilanka Covid World Rajitha Senaratna
By Ajith Aug 16, 2021 08:33 PM GMT
Report

உலகில் மிக வேகமாக கோவிட் மரணங்கள் சம்பவிக்கும் நாடாக இலங்கை உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி இணைந்து உலகளாவிய ரீதியிலான கோவிட் மரணங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளன. இதில் இலங்கை எந்த இடத்தில் உள்ளது என்பது தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது.

உலக தகவல்களுக்கு அமைய கோவிட் வைரஸ் பரவலில் நமது நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிகளவு கோவிட் மரணங்கள் சம்பவிக்கும் இரண்டாவது நாடாக இலங்கை உள்ளது.

ஒரு வாரத்துக்கு முன்னர் எடுத்துக்கொண்டால் நமது நாடு நான்காவது இடத்தில் உள்ளது. தொற்றாளர்கள் உயிரிழக்கும் சதவீதத்தைக் குறைத்து அல்லது அதிகரித்துப் பார்த்தால் இலங்கை முதலாவது இடத்தில் உள்ளது.

உலகில் மிக வேகமாக கோவிட் மரணங்கள் சம்பவிக்கும் நாடாக இலங்கை உள்ளது. நமது நாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் மில்லியனுக்கு 5.7 வீதமானோர் கோவிட் தொற்றால் மரணமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் 1.9 வீதமானோர் மரணிக்கின்றனர்.

இங்கிலாந்தில் 1.33 வீதமானோரும், பிரான்ஸில் 0.76 வீதமானோரும், இந்தியாவில் 0.35 வீதமானோரும் மரணிக்கின்றனர்.

எனினும், இலங்கையில் 5.73 வீதமானோர் மரணிக்கின்றனர். இது இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பல மடங்கு அதிகமாகும். இலங்கையில் 15ஆம் திகதி நிலவரத்தைப் பார்க்கும்போது கோவிட் மரணங்கள் 6000ஐ அண்மித்துள்ளன.

நேற்று (நேற்றுமுன்தினம்) 161 மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கைகள் தொடர்பிலும் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. சுகாதார அமைச்சு ஊடாக அரசு வெளியிடும் கோவிட் புள்ளிவிவரங்களில் குளறுபடிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 629 என்று அரசு கூறும்போது உண்மையான நிலவரம் 12 ஆயிரத்து 555 ஆக காணப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 45 என்று அரசு கூறும் போதும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தொற்றாளர்களின் எண்ணிக்கை 342 என்று கூறுகின்றார்.

திருகோணமலை மாவட்டத்தில் 71 என்று அரசு கூறும் போது மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் 163 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர் என்று தகவல்களை வெளியிட்டுள்ளார் என்றார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US