நாட்டின் பொருளாதார நெருக்கடி: தீவிரமடையும் பேச்சுவார்த்தைகள்
இலங்கை, மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இயற்கைக்கான கடனுக்கான பரிமாற்றத் திட்டத்திற்காக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் மற்றும் பிற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவது உறுதிச்செய்யப்பட்டுள்ளது.
எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் நடக்கும் COP27 காலநிலைப் பேச்சுவார்த்தையின், ஒரு கட்டமாக, இது அமைந்துள்ளது.
ஆரம்ப கட்டம்
இந்தநிலையில் நாடு ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்று சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், இருப்பினும் அதை, தற்போதைக்கு உறுதிப்படுத்த முடியாது என்றும் ஜாசிங்க கூறியுள்ளார்.
இலங்கையில் வெளிநாட்டு நாணயத்தின் பற்றாக்குறை இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆசியாவிலேயே மிக வேகமான வீதத்தில் பணவீக்கத்தை அதிகரித்தது, இதனால் நாடு அதன் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.
அத்துடன் உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.
பேச்சுவார்த்தைகள்
நிதி மற்றும் பிற நாடுகளின் உதவி ஆகியவை தற்காலிக நிவாரணம் அளித்தாலும், எரிபொருள் போன்ற இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடியாமல் இலங்கை இன்னும் போராடி வருகிறது.
எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் நடக்கும் COP27 காலநிலைப் பேச்சுவார்த்தையில் வளரும் நாடுகளிடையே அதிகக் கடன்சுமை பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினையாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் வளர்ந்த நாடுகளால், காலநிலை சீர்கேடுகளால், பாதிக்கப்படும், வளர்முக
நாடுகளுக்கு நட்டஈடுகள் வழங்கப்படுவற்கான உடன்படிக்கை ஒன்றுக்கும் இந்த
மாநாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ளது.