இலங்கை பணப்புழக்க நெருக்கடியை எதிர்கொள்வதாக தகவல்
இலங்கை பணப்புழக்க நெருக்கடியை எதிர்கொள்வதாக இந்தியாவின் பிரபல ஊடகமான த ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 3 பில்லியன் டொலரில், 362 மில்லியன்
டொலரை முதல் தவணையைில் பெற்றுள்ளது.
நாணயத்தை அச்சிடக்கூடாது
அதேநேரம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் விவேகமான நிதி நிர்வாகத்திற்காகவும் நாணயத்தை இனி அச்சிடக்கூடாது என கடன் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால், நாடு பணப்புழக்க நெருக்கடியை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு எரிபொருள் கொள்வனவுக்காக பெறப்பட்ட 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் பாதியை இலங்கை திருப்பிச் செலுத்தியுள்ளது.
எனவே சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா உள்ளிட்ட நன்கொடை நாடுகள் கடன் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக குறிப்பிடத்தக்க முடிவெடுக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி
இதேபோல் பாகிஸ்தானும் பொருளாதாரப் படுகுழியை உற்று நோக்கும் நிலைமையில் உள்ளது.
பாகிஸ்தானின் வெளிநாட்டு கையிருப்பு 4.2 பில்லியன் அமெரிக்க டொலராக குறைந்துள்ளது, இது ஒரு மாத இறக்குமதி செலவை பூர்த்தி செய்ய மாத்திரமே போதுமானது.
இதுமட்டுமின்றி பாகிஸ்தானின் மையமான பஞ்சாப் தவிர அனைத்து மாகாணங்களிலும் உணவுப் பற்றாக்குறை நிலவுகிறது.
பாகிஸ்தான், சீனாவின் கையாளாக செயற்படுகின்ற போதும், அது பொருளாதார வீழ்ச்சிக்கு உதவாது என்றும் தெ ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.