இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு ஆர்வமுள்ள நாடாக மாறியுள்ள இலங்கை
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை நாடானது இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு ஆர்வமுள்ள முக்கிய நாடாக மாறியுள்ளது.
இந்தநிலையில் இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு குறித்து இரு நாடுகளும் ஆரம்ப கட்ட பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா பல இரு தரப்பு
திட்டங்களை ஆரம்பித்துள்ளது.
இலங்கைக்கு இந்தியா இங்கிலாந்து உதவிக்கரம்

பெட்ரோலிய குழாய் மற்றும் இரு நாடுகளின் மின்சாரத் திட்டங்கள் இவற்றில் அடங்குகின்றன.
இந்தநிலையில் கொழும்பு தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதால், இந்தியா மற்றும் இங்கிலாந்து இணைந்து எரிசக்தி பாதுகாப்பில் முதலீடு செய்வது உதவிகரமாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.