கோவிட் தடுப்பூசியை வழங்குவதில் இலங்கை உலகில் முன்னணியில் இருக்கின்றது - நாமல் ராஜபக்ச
கோவிட் பரவலை அரசாங்கம் மிகசும் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதாகவும் அத்துடன் கோவிட் தடுப்பூசியை வழங்குவதிலும் இலங்கை உலகில் முன்னணியில் இருப்பதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் நாட்டில் வாழும் பெரும்பான்மையான மக்கள் அந்த கட்டுப்பாடுகளை மதித்து வீடுகளில் இருக்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.
அதேபோல் பொலிஸார் உட்பட அரச அதிகாரிகள் மக்களின் அத்தியவசிய சேவைகளை வழங்கவும் பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனால், கொழும்பு மாநகர பிரதேசத்திற்குள் சிறிய கண்காணிப்புக்காக வந்தேன். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன, பயணக் கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள தடைகள் என்ன, அவற்றுக்காக எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அறிந்துக்கொள்வதற்காக கொழும்பு நகர பிரதேசத்திற்கு வந்தேன்.
இப்படியான தருணங்களிலேயே தாம் மக்களுடன் சம்பந்தப்பட்டு, அவர்களுடன் கலநதுரையாட வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.