இலங்கையின் இணையவழி வருகை அட்டை முறை அறிமுகம்
இலங்கை அரசாங்கம் இணையவழி வருகை அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இலங்கைக்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக இதனை நிரப்ப முடியும்.
பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் இலங்கைக்கான தனது ஆலோசனையை புதுப்பித்துள்ள ஆலோசனையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையம் மூலமான வருகை
இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், வெளிநாட்டவர்கள், இலங்கைக்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பூர்த்தி செய்யக்கூடிய இணையம் மூலமான வருகை அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பயணிகளும் இலங்கை அரசாங்கத்தால் சுற்றுலாப் பயணிகளுக்காக விதிக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும்.
அத்துடன் இலங்கைக்குள் நுழைவதற்கு மின்னணு பயண அங்கீகாரத்திற்கு வருகை அட்டையை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுவதாக பிரித்தானியா வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகள்
இது தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இணையத்தளத்தில் பதிவாகியுள்ளன.
ஒன் எரைவல் என்ற வருகைத்தரு விசா வசதிகள் உள்ளபோதும், பயணத்திற்கு முன் வருகை
அட்டைக்கு விண்ணப்பிப்பது பயணத்தை எளிதாக்குவதற்கும் வருகையில் தாமதங்களைத்
தடுப்பதற்கும் உதவும் என்றும் பிரித்தானிய அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
