அதிகம் உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்
உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
செப்டெம்பர் 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.
இதன்படி, உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள 10 நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.
இலங்கையின் உணவுப் பணவீக்கம்

இலங்கையில் உணவுப் பணவீக்கம் 91 சதவீதமாக உள்ளது.
உலகிலேயே அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடு ஜிம்பாப்வே, இது 353 சதவீதம்.
லெபனான் மற்றும் வெனிசுலா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.
துருக்கி, ஈரான், அர்ஜென்டினா, மால்டோவா, எத்தியோப்பியா, ருவாண்டா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற நாடுகள் ஆகும் .
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
குளிர்காலத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பாருங்க Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri