இலங்கை இந்திய பயணிகள் கப்பல் சேவை விரைவில்
இலங்கை இந்திய பயணிகள் கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்குரிய பேச்சு வார்த்தைகள் இந்திய அரசுடன் இடம்பெற்று வருகின்றதாக துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்தார்.
யாழ்ப்பாண விஜயத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை இந்தியாவுக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்று வருகின்றன.
அந்த பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதன் பிரகாரம் விரைவில் கப்பல் சேவையினை ஆரம்பிக்க கூடிய சாத்திய கூறுகள் காணப்படுகின்றன. அவ்வாறு ஆரம்பிப்பதன் மூலம் எமது நாட்டுக்கான பொருளாதாரத்தினை நாங்கள் இலகுவாக எட்டிக் கொள்ள முடியும்.
அத்தோடு காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அருகில் சீமெந்து தொழிற்சாலை ஒன்றும் இயங்காத நிலையில் காணப்படுகின்றது. அதனை இயக்குவதன் மூலம் பொருளாதாரத்தை உயர்த்த முடியும். அதன்படி கைத்தொழில் அமைச்சு மற்றும் ஜனாதிபதியுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி வெகு விரைவில் அதனை இயங்குவதற்குரிய நடவடிக்கையை எடுக்கவுள்ளோம்.
மேலும் வடக்குக்கான எரிபொருட்கள் தரை மார்க்கமாக பவுசர்களில் எடுத்துவரப்படுகின்றன. ஆனால் காங்கேசன்துறை துறைமுகம் மீள திறக்கப்படும் போது கப்பல்களின் மூலம் எரிபொருளை கூட இலகுவாக கொழும்பிலிருந்து எடுத்து வர முடியும். அவ்வாறு பல விதங்களிலும் இந்த காங்கேசன்துறை துறைமுகமானது வடக்கு மக்களுக்கு பெரிதும் உதவுகின்றது அதேபோல வெளி தொடர்புகளும் காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக மேம்படுத்தப்படும்.
எனவே அதற்குரிய நடவடிக்கைகளை நாங்கள்
மேற்கொள்ளவுள்ளோம்.
மத்தள விமான நிலையத்திற்கு பலாலி விமான நிலையத்திலிருந்து விமான நிலைய
பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக கூறப்படும் கருத்தில் எந்தவித உண்மையும்
இல்லை அவைகள் சும்மா கட்டு கதையே தவிர அதில் எந்தவிதமான உண்மை சம்பவம் இல்லை.
எனினும் மிக விரைவில் பலாலி விமான நிலையம் மீள திறப்பதற்குரிய நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
