இலங்கை இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை : தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய தருணம் - விசேட செவ்வி(Video)
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் தமிழர்கள் என்ற ரீதியில் ஒன்றுபடவேண்டிய தருணம் இது எனத் தமிழக மீனவ சங்கத் தலைவர் ஜேசுராஜா தெரிவித்துள்ளார்.
இவர் வழங்கிய விசேட செவ்வியில், ''தற்போது இந்திய இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை தீவிரமாகியுள்ளது. இது தொடர்பில் தமிழக மீனவர்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கிறது என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்தவாரம் யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் தாக்கியதாகவும் அதனால் அவர்கள் உயிரிழந்தார்கள் எனத் தெரிவித்து வடபகுதியில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எல்லோருமே இதற்காக ஆவேசப்பட்டுக் கோபப்படுகிறார்களே தவிர இதன் உண்மை நிலையை யாரும் கண்டறியவில்லை. உண்மையிலேயே தமிழக மீனவர்களால் தாக்கப்பட்டார்களா? மற்றும் இரவு நேரத்தில் கடலில் என்ன நிகழ்ந்தது? என்பது தொடர்பில் யாருக்குமே தெரியாது.
நாங்களும் மீனவ சங்கங்களும் தமிழக அரசும் இணைந்து இந்திய மீனவர்களால் இந்தமாதிரியான சம்பவங்கள் இடம்பெற்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க விசாரணைகளை முன்னெடுத்து வருகிறோம்.
பாரம்பரியமாக இருநாட்டு மீனவர்களும் ஒரு தொப்புள்கொடி உறவாக இருந்து கொஞ்சக் காலம் மீன்பிடித்து வந்தோம்.
எனவே இந்த மீனவர் பிரச்சினை தொடர்பில் தமிழர்கள் என்ற ரீதியில் ஒன்றுபடவேண்டிய தருணம் இது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



