இலங்கை - இந்திய முதலாவது டி20 போட்டி: பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு
இலங்கை மற்றும் இந்திய அணிக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இன்று இரவு 07 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், குறித்த போட்டிக்கான சகல டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
டிக்கெட் விற்பனை
எனவே, போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க மைதானத்துக்கோ அல்லது டிக்கெட் விற்பனை செய்யும் இடத்துக்கோ ரசிகர்களை வர வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தப் போட்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்காக மைதான நுழைவாயில் இன்று மாலை 4 மணிக்கு திறக்கப்படும் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 15 மணி நேரம் முன்
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan