மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்கள்! ஜெய்சங்கர் - விஜித ஹேரத்திற்கு இடையே விசேட தொலைபேசி உரையாடல்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையே நேற்று முன் தினம் (23.03.2026) விசேட தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தற்போது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர் மோதல்கள் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பிராந்திய ரீதியான தாக்கங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் ஒரு 'சிறந்த உரையாடல்' இடம்பெற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் நிலைப்பாடு
அத்துடன், மத்திய கிழக்குப் பிராந்திய மோதல்களின் விளைவுகள் மற்றும் தற்போதைய சூழல் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டையும் அவர் இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.
குறிப்பாக, இந்தியாவின் 'அண்டை நாட்டுக்கு முதலிடம்' (Neighbourhood First) கொள்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பையும் வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும் 'மகாசாகர்' (Vision MAHASAGAR) செயற்றிட்டம் ஆகியவற்றின் மீதான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை அமைச்சர் ஜெய்சங்கர் இக்கலந்துரையாடலில் மீள உறுதிப்படுத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த இராஜதந்திரப் பேச்சு மிகவும் வெற்றிகரமானதாகவும், பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகவும் அமைந்திருந்ததாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.
A good conversation with FM @HMVijithaHerath of Sri Lanka.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 23, 2026
Discussed the repercussions of the West Asia conflict. India stands committed to #NeighbourhoodFirst and #VisionMAHASAGAR.
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam