இலங்கையின் 77ஆவது சுதந்திரதின கொண்டாட்டம் ஆரம்பம் - LIVE
இன்று இலங்கையின்(Sri Lanka) 77ஆவது சுதந்திரதினம் கொண்டாட்டம் சற்று முன்னர் ஆரம்பமானது.
1948, பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இதேபோன்றதொரு நாளில் 132 ஆண்டு கால பிரித்தானியரின் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, இலங்கையின் சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்டது.
சுதந்திர இலங்கை
பல் கலாசாரம் கொண்ட நாடு என்பதனால் ஒவ்வொரு கலாசாரத்தின் கலைகளும், சிறப்பியல்புகளையும் நடனம், பாடல், நாடகம் போன்ற வடிவில் வெளிப்படுத்துவார்கள்.
இதன்படி இலங்கையின் 77ஆவது சுதந்திர தின பிரதான நிகழ்வுகள் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் வெகு விமர்சையாக இன்று கொண்டாடப்படவுள்ளது.
இம்முறை பொதுமக்கள் அதிகமாக பங்கேற்கக் கூடிய கொண்டாட்டமாக சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டின் கௌரவத்தை மேலோங்க செய்யும் வகையில், சுதந்திர தின நிகழ்வுகள் வெகுவிமரிசையாகவும் அதேவேளை, செலவுகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் நடத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புகைப்படங்கள் - K.அருள்நாதன்