சிறந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ள இலங்கை
உலகில் சுற்றுலா மேற்கொள்ளக் கூடிய சிறந்த முதல் 25 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் பெயரிடப்பட்டு்ள்ளது.
பிரபல ட்ரவல் ப்ளஸ் லெஷர் சுற்றுலா வழிகாட்டி சஞ்சிகை இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் மெரிடித் ஊடக குழுமத்தினால் வெளியிடப்படும் இந்த சஞ்சிகையில், புதிய சுற்றுலா வலயங்களின் பட்டியலில் இலங்கை 24 ஆவது இடத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் இலங்கை மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளில் ஒரே இடத்தை பிடித்துள்ளன.
சுற்றுலாப் பயணிகளிடையே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ட்ரவல் ப்ளஸ் சஞ்சிகையானது, இவ்வருடத்துக்கான சிறந்த சுற்றுலா தளங்களை தேர்தெடுத்தெடுப்பதற்கு, கடந்த ஜனவரி 11 ஆம் திகதி முதல் மே 10 ஆம் திகதிவரை இந்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





பார்கவி-தர்ஷனுக்கு தல தீபாவளி ஏற்பாடு செய்யும் நந்தினி, ஆனால்?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
