பிரதமரின் அறிவிப்பால் ராஜதந்திர ரீதியில் இலங்கைக்கு நெருக்கடி
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வார்த்தைப் பிரயோகம் காரணமாக இராஜதந்திர ரீதியில் இலங்கை பெரும் நெருக்கடியொன்றை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் தெரிய வருகையில்,
இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத்துணி விநியோகத்துக்குத் தேவையான துணிகளை சீன அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
அதனை இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றிருந்தது.
சீனத் தூதுவர்
இந்நிலையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் அதனை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கையளித்திருந்தார்.
இதன்போது சீன அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, சீன மக்கள் குடியரசு (People’s Republic of China (PRC) என்பதற்குப் பதிலாக சீனக்குடியரசு ( ‘Republic of China’ ROC) என்று குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
சீனக்குடியரசு என்பது தாய்வானைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவதுடன், தாய்வானுடன் வரலாற்று ரீதியாக சீனா பெரும் பகைமை பாராட்டி வருகிறது.
இந்நிலையில் மக்கள் சீனக்குடியரசின் அன்பளிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பயன்படுத்திய வார்த்தைகள் காரணமாக சீன அரசாங்கம் சற்று அதிருப்தி கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக ராஜதந்திர நெருக்கடியொன்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |