இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கை
தமது இலங்கைக்கான பயணத்தின் போது பல மனித உரிமைகள் விவகாரங்கள் குறித்து கவனத்தை ஈர்க்க முடிந்ததாக சர்வதேச மன்னிப்புச் சபையின் பிராந்திய மனித உரிமைகள் விடயங்களுக்கான சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரோஸ் முச்செனா கூறியுள்ளார்.
இலங்கைக்கான பயணத்தை இன்று முடித்துக்கொண்ட நிலையில் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பில் அறிக்கை
சர்வதேச சமூகத்தில் உள்ள சிலர், இலங்கையின் அவசர மனித உரிமைகள் சவால்களை கண்டுக்கொள்ளாத நிலையில், பாதிக்கப்பட்ட சமூகங்களின் கவலைகளைப் புரிந்து கொள்வதற்கு இந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமைந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் வலுப்படுத்துவதற்குமான தமது பணிகளுக்கு மேலும் அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் டிப்ரோஸ் முச்செனா கூறியுள்ளார்.
நாடு முழுவதிலும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களில் பலரை கடந்த சில நாட்களாக சந்தித்து கவலைகளை கேட்கமுடிந்தது.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்
இந்தநிலையில் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை நிலைநாட்டவும் பாதுகாக்கவும் தொடர்ந்தும் சர்வதேச மன்னிப்புசபை பணியாற்றும்.
அதேநேரம் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீண்ட கால கோரிக்கையான உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றை பெற்றுத்தருவதற்கு இலங்கை அரசாங்கம் அவசரமாகவும் உண்மையாகவும் செயற்பட வேண்டும் என்றும் டிப்ரோஸ் முச்செனா கோரியுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மாற்றியமைக்கும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் அரசாங்கத்துடன் எச்சரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்துடன் பிணையெடுப்புப் பொதியானது குறைந்தபட்ச சர்வதேச மனித உரிமைத் தரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
அத்துடன் பிணை எடுப்பு முடிவோடு இணைக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மற்றும்
விதிமுறைகள், நிபந்தனைகள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்றும் தாம்
வலியுறுத்தியுள்ளதாக அவர் தமது அறிக்கையில்
தெரிவித்துள்ளார்

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
