நாட்டின் பொது நிதி நிர்வாகத்தை வலுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
இலங்கை அரசாங்கம் நாட்டின் பொது நிதி நிர்வாகத்தை வலுப்படுத்த உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் Française de Developpement ஆகியவற்றுடன் நிதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
இதன்போது 9.8 மில்லியன் யூரோக்களை மானியமாக பெறுவதற்கான நிதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளன.
நிதி ஒப்பந்தங்கள்
இந்த மானியம், பொது நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதில் பொருளாதார நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் தணிக்கை திட்டமிடல், தர உத்தரவாதம், பணியாளர் திறன், ஈடுபாடு போன்ற துறைகளில் வலுவான நிர்வாகம், அதிக பொறுப்புக்கூறல் மற்றும் இலங்கையின் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த பொறுப்புக்கூறல் கட்டமைப்பை வலுப்படுத்த இந்த மானியம் பயன்படுத்தப்படும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
