இலங்கைக்கு கிடைத்துள்ள பெருந்தொகை அமெரிக்க டொலர்கள்
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பிய அமெரிக்க டொலர்களின் வீதம் கடந்த அக்டோபர் மாதம் அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு தொழிலாளர்கள் 2025 அக்டோபரில் இலங்கைக்கு 712 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள பணத்தினை அனுப்பியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா வருவாய்
2025 ஜனவரி முதல் அக்டோபர் வரை வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து 6.52 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 20.1% அதிகமாகும் என்றும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சுற்றுலா வருவாய் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மொத்த சுற்றுலா வருவாய் 2.47 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இது 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பதிவு செய்யப்பட்ட 2.34 பில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலா வருவாயுடன் ஒப்பிடும்போது 5.3% அதிகமாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
பிரித்தானியாவில் நுற்றுக்கணக்கானோர்... கொடுஞ்செயலுக்கு திட்டமிட்ட இருவர்: விரிவான பின்னணி News Lankasri